மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா

 


மேல்விஷாரம் தி  நேஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் அலுவலகத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது 

 இந்த விழாவிற்கு அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமை தாங்கினார்.

முஹம்மத் பஹிம்

கே.முஹம்மத் இத்ரீஸ்

எச்.முஹம்மத் ஹாஷீம்

அ.முஹம்மத் தமீம்

டீ.முஹம்மத் உஸ்மான்

யி.முஹம்மத் ஹலீம்

யி‌.முஹம்மத் உஸ்மான்

ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கே.ஓ.நிஷாத் அஹ்மத் வரவேற்புரையாற்றினார்


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆற்காடு நகர காவல் நிலைய ஆய்வாளர் டீ‌.விநாயக மூர்த்தி  துணை ஆய்வாளர் மகாராஜன் அவர்கள், மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தணலஷ்மி எம்பிபிஎஸ் மற்றும் மேல்விஷாரம் நகர திமுக பொறுப்பாளர் முஹம்மத் அமீன் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினர்


அதனை தொடர்ந்து தி நேஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் அலுவலகத்தில்  500க்கும் மேற்பட்டோர் ஓட்டுநர்   உரிமம் பெற  விண்ணப்பித்து இருந்தனர். இன்று 75பேருக்கு ஓட்டுநர் உரிமத்தை ஆய்வாளர் அவர்கள் வழங்கினார்

அதனை தொடர்ந்து மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தொடர்ந்து 15 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது இந்த முகாமில் மூலம்  இதுவரை 9,750 பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர். அதனை பாராட்டும் வகையில் மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் வெள்ளிப் பதக்கம் மற்றும்  வெண்கல பதக்கம் வென்றவர்களை பாராட்டும் வகையில் இனிப்பு மற்றும் முகக்கவசங்கள் ஊர் பொதுமக்களுக்கு வழங்கினர்