75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும் போலீஸ் புலனாய்வு அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது.
சென்னை ஆவடியில் இன்று ஆகஸ்ட் 15 இந்திய 75 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் மற்றும் போலீஸ் புலனாய்வு அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு முககவசம்,கிருமிநாசினி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழச்சியில் இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் சட்ட அமைப்பின் பொதுசெயலாளர்வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார்,
இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் அறங்காவலர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராகதிரு.S.சத்திய மூர்த்தி,காவல் உதவி ஆணையாளர் ஆவடி சரகம், திரு.E.ஜெகநாதன் காவல் ஆய்வாளர்T7 டேங்க் பேக்டரி காவல் நிலையம், டாக்டர்.ரவிசந்திரபாபு நிறுவனர் போலீஸ் புலனாய்வு அறக்கட்டளை, டாக்டர்.புதியசெல்வம்துணை இயக்குநர், போலீஸ் புலனாய்வு அறக்கட்டளை, பொருளாளர்இன்டர்நேஷனல் லா பவுண்டேஷன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடு இந்திய அம்பேத்கர் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர், இதன் நிறுவனத்தலைவர் பிரசாந்த் நன்றியுரை கூறினார்.