போலி ஆவணங்கள் மூலம் பத்திரம் பெற முயற்சி: சப்-இன்ஸ்பெக்டர் பெயரில் போலி கையெழுத்து..பெண் உள்பட 3 பேர் கைது..!!

 


கோவை: காணாமல் போன பத்திரத்துக்கு பதிலாக புதியதாக பத்திரம் பெற சப்-இன்ஸ்பெக்டர் போல போலி கையெழுத்திட்டு ஆவணம் தயாரித்த கோவையைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் எஸ். ஐ. எச்..ஹச். காலனியைச் சேர்ந்தவர் சங்கீதா சமீபத்தில் தனது பத்திர விவரங்கள் மற்றும் ஆவணங்கள் காணாமல் போன நிலையில் புதிய ஆவணம் பெற முயன்று உள்ளார். அப்போது அவரை அணுகிய கோவை குனியமுத்தூரில் சேர்ந்த மனோகரன், பெரியநாயக்கன்பாளையத்தில் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் போலியான ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுக்கலாம் என யோசனை கூறியுள்ளனர்.

இதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சங்கீதாவின் நிலப் பத்திரம் மற்றும் ஆவணங்கள் காணாமல் போனது போலவும் இது தொடர்பாக இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது போல ஆவணங்கள் தயாரித்துள்ளனர்.


மேலும், அதற்கான சான்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியாற்றிய பாலமுருகன் என்ற சப் இன்ஸ்பெக்டரின் கையெழுத்தை போலியாக போட்டு ஆவணம் தயார் செய்து அதனை கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர். அந்த ஆவணங்களை சரிபார்த்த சார் பதிவாளருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து இது குறித்து உண்மை தன்மையை அறிய இலுப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த ஆவணங்களை தபால் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.

இதனை பார்த்த எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி அதிர்ச்சி அடைந்தார். அந்த ஆவணங்களில் கையெழுத்திட்டுதாக கூறப்படும் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தற்போது இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் பணியில் இல்லாததும் அவரின் கையெழுத்தை போலியாக போடப்பட்டிருப்பது போலீஸ் நிலைய முத்திரையும் போலியாக தயாரித்து சீல் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதைஅடுத்து இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ் ஸ்டாலின் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்ட சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா (41), மனோகரன் (42), ராஜேந்திரன் (47) ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் சங்கீதா திருச்சி சிறையிலும், மனோகரன் ராஜேந்திரன் ஆகியோர் அறந்தாங்கி சிறையிலும் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் இவர்களுடன் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image