கலவையில் 3500லி எரிசாராயம் கடத்திய மினிவேனை போலீஸார்மடக்கி பிடித்து விசாரணை.
கலவையில் வாகன சோதனையின் போது வேனில் கடத்திய 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு கலவை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கலவை அடுத்த சென்னசமுத்திரம் சிருவிடாகம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அதிவேகமாக லோடு வேன்ஒன்று வருவதைக் போலீசார் மடக்கினர்
போலீசாரை கண்டதும்,வேன் ஓட்டுநர் உட்பட இருவர் வேனஇலிருந்து இறங்கி தப்பி ஓடினர் .
இதனையடுத்து போலீஸார், வேனை சோதனை செய்தனர். 100கேன்களில் 35 லிட்டர் அளவிற்கு மொத்தம் 3500 லிட்டர் எரிசாராயம் கடத்திச் செல்வது தெரியவந்தது உடனே போலீஸார்,எரிசாராயம் உள்ள கேன்களையும்லோடு வேனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கலவை போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடியவர்கள் குறித்தும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர் .
மேலும் கலவைப்போலீஸார் வழக்கு குறித்த அனைத்தையும் மாவட்ட கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரில் கலால் பிரிவு மாற்றம் செய்தனர். அதனைத்தொடர்ந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் .