ரூ.2000 தரணும்’: கறார் காட்டிய விஏஓ…வைரலாகும் லஞ்சம் வாங்கிய வீடியோ..!!
விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரின் வீடியோ வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே நவமால் காப்பேர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட காயத்ரி நகரைச் சேர்ந்தவர் சர்புதீன். இவர், வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர் சப்ராபீபீயை அணுகியுள்ளார்.வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் தந்தால் மட்டுமே சான்றிதழ் கிடைக்கும் என விஏஓ கறாராக கூறியுள்ளார். முதலில் ரூ.500 லஞ்சம் கொடுத்த சர்புதீன், 2வது தவணையாக ரூ.1500ஐ கொடுக்கும் போது அதனை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.