தலைப்பு : திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது! 38சவரன் தங்க நகை பறிமுதல்! போலீசார் நடவடிக்கை!



திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகுனிச்சி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் மனோஜ்(30) மற்றும் பெரிய மோட்டூர் காலனி பகுதியை சார்ந்த மாது மகன் சரத்குமார் (29) ஆகிய இருவரும் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் பகுதிகளிலுள்ள குணசேகரன், வெங்கடேசன், சிவகாமி ஆகியோர் வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இன்று ஜோலார்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.

அப்போது பல்வேறு இடங்களில் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்ட அவர்களிடம் இருந்து சுமார் 38 பவுன் தங்க நகைகள் போலீசாரால் பறிமுதல் செய்துள்ளனர். 

அதுமட்டுமன்றி திருப்பத்தூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் காவல்துறைக்கு சவால் விடும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது குறித்து ஒப்புக்கொண்டனர்.

மனோஜ் குமார் மீது மட்டும் சுமார் 22 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து அவர்களை ஜோலார்பேட்டை காவல்துறை கைது செய்து திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த இன்னும் இதுபோன்ற திடுக்கிடும் குற்ற சம்பவங்களில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்கிறதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்