அரக்கோணம் அருள்மிகு ஸ்ரீ முப்பெரும் தேவியர் ஆலயம் இணைந்து நடத்திய கொரோனோ தடுப்பூசி முகாமில் 198 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

 


ஜே எஸ் ஆர் என்டர்பிரைசஸ், ஸ்ரீ ரத்தின குமாரி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் மற்றும் அரக்கோணம் அருள்மிகு ஸ்ரீ முப்பெரும் தேவியர் ஆலயம்  இணைந்து நடத்திய இலவச கொரோனோ தடுப்பூசி முகாம் அரக்கோணம் ஜோதி நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முப்பெரும் தேவியர் ஆலயம் அருகில் நடைபெற்றது. அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், நகராட்சி ஆணையர் ஆசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டு  முகாமை துவக்கி வைத்தனர். 

இதில் சுமார் 198 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முகாம் ஏற்பாட்டினை  ஜே எஸ் ஆர் என்டர்பிரைசஸ் தலைவர்  ஜி ஜெ சதீஷ் குமார் ரெட்டி  மற்றும் ஸ்ரீ ரத்தின குமாரி இன்ஜினியரிங் ஒர்க்ஸ் தலைவர் ஜி ஜெ ஆனந்த்குமார் ரெட்டி ஆகியோருடன் ஜி ஜெ ஷியாம் குமார் ரெட்டி மற்றும் ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். 

முகாமில் மூதூர் ஆரம்ப சுகாதார மருத்துவர் மலர்விழிகௌசல்யா, சுகாதார அலுவலர் செந்தில்குமார் அருள்மிகு ஸ்ரீ முப்பெரும் தேவியர் ஆலயம் கமிட்டி பி சீனிவாசன் சரவணகுமார் தணிகாசலம்  நகராட்சி ஆய்வாளர் ஸ்ரீகாந்த் மற்றும் எஸ் ரமேஷ்  கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.