10ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் ஒட்டம்...!

 


திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியநாதன் (40). இவர், வீட்டின் முன்பகுதியில் உள்ள ஒரு அறையில் மருந்துக்கடையுடன் கிளினிக் நடத்தி வருகிறார். மருத்துவ படிப்பை படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரின் பேரில், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் கண்ணகி தலைமையில் மருத்துவ குழுவினர்  திடீர் சோதனை நடத்துபோது பாக்கியநாதன் தப்பியோடிவிட்டார். 

இந்நிலையில் விசாரணையில் பாக்கியநாதன் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கிளினிக்கும் மருந்து கடையும் நடத்தி வந்தது தெரியவந்தது. அவர் நடத்திய கிளினிக்கில் நடத்திய சோதனையில், குளுக்கோஸ் பாட்டில்கள், ஊசி, மருந்து, மற்றும் மாத்திரைகள், ஸ்டெத் தாஸ்கோப் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பாக்கியநாதன் MBBS பட்டபடிப்பு முடித்த டாக்டர்கள் நடத்தும் மருத்துவமனைக்கு இணையாக, போலி மருத்துவர் கிளினிக்கை நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதைத்தொடர்ந்து, தப்பியோடிய போலி மருத்துவர் பாக்கியநாதன் மீது இணை இயக்குநர் கண்ணகி திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் , காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாக்கியநாதனை தேடி வருகின்றனர் இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம். கலசபாக்கம் அடுத்த கோடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் வயது  (50). இவர் BA பட்டதாரியான இவர் மருத்துவதுறை சம்பதமாக படிக்காமல் தனது வீட்டிலேயே கிளினிக் தொடங்கி, கடந்த 3 ஆண்டுகாலமாக அப்பகுதியை சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கலசபாக்கம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சவுத்தரி தலைமையில்  7 பேர் கொண்ட குழுவினர்  சங்கரின் வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, அவர் போலி மருத்துவர் சங்கர் நோயாளிகளுக்கு ஆங்கில முறை சிகிச்சை அளிப்பது தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து , அங்கிருந்த ஆங்கில மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், மற்றும் அங்கு இருந்த கருவிகள் போன்ற மருத்துவ உபகரகணங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், சங்கரை கலசபாக்கம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கலசபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்ப குதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image