அம்மன் சிலையை மானபங்கப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்துi முன்னணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு

 


அம்மன் சிலையை மானபங்கப்படுத்தியதாக இந்து முன்னணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனாவிடன் புகார் மனு அளித்தனர் இந்த மனுவில் கூறியிருப்பதாவது 

 காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சலிங்கேஸ்வரர்  ஆலயம் அமைந்துள்ளது

 நேற்று முன்தினம் நள்ளிரவில் 22.07.21 பிரதோஷத்தன்று இரவு நேரத்தில் சில சமூக விரோதிகள்  கோவிலின் சுற்று சுவரை எகிறி குதித்து  பூட்டை உடைத்து  கோயிலுக்குள் புகுந்து காமாட்சி அம்மன், துர்க்கை அம்மன், சிலையின் மீதுள்ள புடவையை அவிழ்த்து எரித்து அம்மன் சிலை மீதான பாலியல் விஷயங்களை செய்துள்ளனர்

  இந்தக் கோயிலில் பூஜை செய்யும் பூசாரி ரவி விடியற்காலையில் வந்து கோவிலுக்குள் சென்று அம்மன் சிலையை பார்த்த போது அம்மன் சிலை மீது உள்ள புடவையை கழற்றி விட்டு, சிலையை மானபங்கம் செய்து, புடவை எரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தாகவும்  மேலும் அம்மன் சிலையை உற்றுப் பார்த்தபோது அம்மன் சிலையின் திருமேனியின் மீது விந்து அனு போன்ற படிமங்கள் படிந்திருப்பதை பார்த்து  பக்கத்தில் உள்ள பொதுமக்களை அழைத்து வந்து  நடந்த காரியங்களை தெரிவித்ததாகவும் கூறியிருந்தார் 

மேலும்  இதே போன்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருபதாக பூசாரி ரவி   காவேரிபாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் போலிசாரால் சிஎஸ்ஆர் 360/ 20/ 21 தரப்பட்டது தொடர்ந்து இந்தக் கோயிலில் இது போன்ற இழி செயல்களை செய்து பக்தர்கள் மனதில் மிகுந்த வேதனையும் பக்தர்களுக்கும் அந்த பகுதி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது

 மேலும் மத மோதல்களை தடுக்கும் வண்ணம் கோவிலின்  புனித தன்மையை கெடுக்கும் இந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்தும்  இதுபோல் திரும்ப நடைபெறாத வண்ணம் கோவிலுக்கு பாதுகாப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததுமேலும் இந்த சம்பவத்தைக் குறித்து இந்து முன்னணி வேலூர் ஒருங்கிணைந்த கோட்ட பொறுப்பாளர் 

டிவி.ராஜேஷ்  தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ்  மீனாவிடம் புகார் மனு அளித்தனர்.

 இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இது போன்ற ஈனச் செயல்களில் செய்து மத பதட்டத்தை உருவாக்கக்கூடிய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பாக கேட்டுக் கொள்வதாக கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்