முன் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் @EPSமீது சேலம் மாநகர போலீசார் வழக்குப்பதிவு

 


சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி அதிமுக சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த நிலையில் சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலத்தில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அதிமுகவினர் மீது சேலம் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 1500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு