அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டத்திற்கு மீட்பு பணிகளுக்காக விரைந்தனர்

 


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக 11 மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்ற மாவட்டங்களிலும் மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது அதன்படி  நீலகிரி, கோவை, மாவட்டத்தில் தொடர் மழையினால் அங்கு  உள்ள  பில்லூர் அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் வேண்டு கோளுக்கிணங்க  அரக்கோணத்தில் உள்ள  தேசிய பேரிடர் மீட்புப் படையினர்   நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டத்திற்கு 3 குழுக்களாக சுமார் 60 பேர் அதி நவின மீட்பு கருவிகளுடன் வாகனத்தில்  நேற்று விரைந்தனர் .

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்