ஒன்றரை வயது குழந்தையின் தலையின் மீது கட்டுக் கல்லைப் போட்டுக் கொலை செய்த வாலிபர் கைது

 


காவேரிப்பாக்கம் உப்புமேடு பகுதியை  சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் பிரசாந்த் வயது 28 இவருக்கு

 சிறுவளையம் கிராமத்தைச் சேர்ந்த இவரின் அப்பாவுடன் பிறந்த லட்சுமியின் மகள்  காயத்ரிக்கும் திருமணம் நடந்து 2 பிள்ளைகள் உள்ளனர் காயத்ரிக்கு உடன்பிறந்த தங்கை கனிமொழி இவர் ஆறுமுகம் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்

 இவருக்கு ஒரு குழந்தை பிறந்தது குழந்தையின் பெயர் கபிலேஷ் காயத்ரி அம்மாவை பார்த்துவிட்டு வருவதற்காகவும், கனிமொழி இரண்டாவது குழந்தை பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளனர் 

இந்த நிலையில் நேற்றைய முன் தினம் 10.7.21 அன்று காயத்ரி தன்னுடைய கணவரை நீங்கள் தனிமையாக வீட்டில் இருக்க வேண்டாம் என் அம்மா வீட்டிற்கு வந்து விடுங்கள் என்று கூறி அழைத்துள்ளார்

 சம்பவத்தன்று இரவு சுமார் பத்து முப்பது மணிக்கு காயத்ரி மகனும் கனிமொழியின் மகன் கபிலேசும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது இரண்டு குழந்தைகளும் சண்டை போட்டுக்கொண்டதால் கனிமொழியின் அம்மா, லட்சுமி, காயத்ரி

மகனிடத்திலிருந்து செல்போனை பிடுங்கி கனிமொழியின் மகன் கபிலேஷ்சிடம் கொடுத்ததால்  காயத்ரியின் கணவர் பிரசாந்த் மாமியார் லட்சுமியிடம் என் மகன் உனக்கு பிடிக்காத, என்று சண்டை போட்டு வெளியில் இருந்த கட்டுக்களை தூக்கிவந்து வீட்டிலுள்ள கபிலேஷ்  மீது வைத்த போது  கனிமொழி ஏன் என்னுடைய மகனை உனக்கு பிடிக்கவில்லை என்று கேட்க 

அதற்கு பிரசாந்த் உங்க அம்மா என்ன செய்தாலும்  உன்னுடைய பையனுக்கு தான் செய்கிறார்கள், என் மகனுக்கு செய்வதில்லை உன் மகன் செத்தால் தான் என் பையனை கவனிப்பார்கள் என்று சொல்லி திடீரென்று கட்டுகளை தூக்கி கபிலேஷ் தலை மீது போட்டதால் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது

 


இதனால் கனிமொழி  சத்தமிட்டு அலறி கத்தியதால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர் கனிமொழி தன் கணவன் ஆலப்பாக்கத்திலலுள்ள ஆறுமுகத்திற்கு  போன் செய்தபோது பத்து நிமிடத்திற்குள் வந்துவிட்டார்  குழந்தையை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலறிந்து விரைந்து வந்த நெமிலி போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பபினர் இந்த சம்பவம் குறித்து புகாரைப் பெற்றுக் கொண்ட நெமிலி போலீசார் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோரின்  நேர்முக விசாரணைக்குப் பிறகு பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையிலடைத்தனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.