செல்போன் இணைப்பு இளைஞரை கட்டி வைத்து அடித்த மாதவரம் திமுக முன்னாள் கவுன்சிலர்!

 


சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் சச்சின்ராஜ் மற்றும் அவருடன் பணியாற்றி வருபவர் விக்னேஷ் இருவரும் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் ஒரு வீட்டுக்கு செல்போன் இணைப்பு தொடர்பான பணிக்காக சென்றுள்ளார். 

அப்போது அங்கு வந்த திமுக முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு என்பவர் சச்சின் ராஜை தரக்குறைவாக பேசியுள்ளார்அதனை சச்சின்ராஜ் ஏன் அசிங்கமான வார்த்தைகளால் பேசுகிறீர்கள் என கேட்டுள்ளார். 

அதனையடுத்து கவுன்சிலர் திருநாவுக்கரசு தனது அடியாட்களை வரவழைத்து சச்சின்ராஜையும் அவருடன் வந்த விக்னேசையும்  கட்டி வைத்து முரட்டுத்தனமாக கும்பலாக சேர்ந்து ஈவு இரக்கமின்றி கொலை வெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.சச்சின் ராஜுக்கு கண் மற்றும் முகத்திலும், பழனிக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டதால் உடனடியாக இருவரும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். 

இது தொடர்பாக மாதவரம் போலீசில் சச்சின் ராஜ் புகார் அளித்தார் புகாரை ஏற்ற மாதவரம் காவல் ஆய்வாளர் காளிராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு