பாதிரியார் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி பிஜேபி கட்சியினர் வாலாஜாவில் கண்டன ஆர்ப்பாட்டம்வாலாஜாபேட்டையில் வட்டாச்சியர் அலுவலகம் அருகே பாஜக இளைஞரணி சார்பாக பாதரியார் ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

 இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.விஜயன் தலைமை தாங்கினார், மாவட்ட இளைஞரணி செயலாளர் மா.சதீஷ்குமார் கண்டன உரையாற்றினார் அவர் பேசும்போது கல்யாணராமன், கிஷோர் கே.சாமி ஆகியோர் அவதூறாகப் பேசியதாக கூறி அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த , காவல்துறை,பாரத மாதாவையும், பாரத பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்தால் மட்டும் போதாது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் சட்டம் அனைவருக்கும் சமம் என்று அவர் பேசினார்.


 மேலும் மாநில செ.கு.உ.ஜி.வி.பிரகாஷ், ஏ.எம்.கண்ணன் இளைஞரணி மாவட்ட தலைவர் சரத்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் சரவணன், இளைஞரணி மாவட்ட செயர்குழு உறுப்பினர் சதீஷ், மற்றும் மகளிர் அணி தலைவி ஹேமா, மற்றும் நகர பொருப்பாளர்கள் எஸ்.காந்தி,கே.ஞானமுர்த்தி,சந்தோஷ்,ஆறுமுகம், உமாபதி,.மாதவன்,அருண்,ராகேஷ்,ஜகன்,பாரதி.மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)