தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளடி.எஸ்‌.பிக்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்றது

 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், வழக்குகள் சம்மந்தமாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி கூடுதல் பொது வழக்கறிஞர் திரு. கண்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் I நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகப்பெருமாள், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ஆனந்தன், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் III நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் திரு. கண்ணன், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் திரு. ஆலன் ராயன், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் வசந்த், போக்சோ நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா, இயங்கும் தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் கலாலெட்சுமி மற்றும் தூத்துக்குடி உறைவிட மருத்துவர் சைலஸ், கோவில்பட்டி உறைவிட மருத்துவர் கமலவாசன்ஆகியோரும்,

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் . ஹர்ஷ் சிங் இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரகம் திரு. பொன்னரசு, ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், கோவில்பட்டி உதயசூரியன், மணியாச்சி சங்கர், சாத்தான்குளம் பொறுப்பு மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு ஜெயராம் மற்றும் விளாத்திக்குளம் திரு. பிரகாஷ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு முருகவேல், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பாலாஜி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்