கும்பகோணத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் விஜய்ஆரோக்கியராஜ் தலைமையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன் மணிகண்டன் கிருஷ்ணன் பாலாஜிபிரபு செந்தில் முருகன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பிடிஎஸ்களை மேம்படுத்துவதன் மூலம், உடனடியாக 4 ஜி சேவையினை பிஎஸ்என்எல் நிர்வாகம் துவங்க வேண்டும். 5ஜி சேவைகளை துவங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2021 ஜூன் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இனி ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாளன்று ஊதியம் வழங்க வேண்டும். 3வது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீத ஓய்வுகால பலன்கள் ஆகியவற்றை தீர்வு காண வேண்டும், இந்திய அரசாங்கம், நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ள படி பிஎஸ்என்எல் ஆப்டிக் ஃபைபர் மற்றும் டவர்களை பணமாக்க முயற்சிக்கக்கூடாது. காலியாக உள்ள நிலங்களை பணம் ஆக்குவதன் மூலம் பிஎஸ்என்எல் கடன்களைத் திருப்பிக் கட்ட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.-செய்தியாளர்,விக்னேஷ்,கும்பகோணம்