பஞ்சாயத்து தலைவரை கொல்ல முயற்சி

 .


பேய்க்குளம் அருகே கருங்கடல் பஞ்சாயத்து தலைவர் பழனியப்ப புரத்தை சேர்ந்த நல்லதம்பி ஆவார் .

இவர் சாத்தான்குளத்தில் இருந்து பேய்குளத்திற்கு தனது காரில் வந்து கொண்டிருந்துள்ளார்.அப்போது பன்னம்பாறை விலக்கு அருகே நான்கு பேர் பேரிகார்டு களை போட்டு வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கம்புகளால் தாக்கியுள்ளனர் .

இதில் அவரது காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து உள்ளது .மேலும் பஞ்சாயத்து தலைவர் நல்லதம்பி கையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.தனது காரை ரிவர்ஸில் வேகமாக ஓட்டிச் சென்று தப்பிய அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாயத்துத் தலைவருடன் காரில் சென்ற கருங்கடல் 3-ஆவது வார்டு உறுப்பினர் ஈசாக்கு இதுகுறித்து கூறும்போது பிரபாகரன் 6வது வார்டு உறுப்பினராக உள்ள பிரபாகரன் மற்றும் மூன்று பேர் இத் தாக்குதலில் ஈடுபட்டனர் என தெரிவித்தார்.