“பத்திரிகையாளரென தெரிந்தே கொலை” : தானிஷ் சித்திக் மரணத்தில் திடீர் திருப்பம்

 இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தைப் புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்தது.

மேலும் பத்திரிகையாளர் தானிஷ் சித்திக் தாக்குதலின் போது இறந்தது எங்களுக்கு தெரியாது, சம்பவ இடத்தில் பத்திரிகையாளர் ஒருவர் இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாங்கள் அவரை பாதுகாத்திருப்போம். இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம் என தாலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தாலிபான்கள் குறியது முற்றிலும் பொய் என அமெரிக்கச் செய்தி நிறுவனமான வாஷிங்கடன் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தானிஷ் சித்திக் தாக்குதலின் போது உயிரிழக்கவில்லை என்றும் பத்திரிகையாளர் என்று தெரிந்த பிறகே அவரை தாலிபான்கள் சுட்டுக் கொலை செய்துள்ளனர் என முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆலோசகர் மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார்.

 “பத்திரிகையாளரென தெரிந்தே கொலை” : தானிஷ் சித்திக் மரணத்தில் திடீர் திருப்பம் -  வெளியான அதிர்ச்சி தகவல்!

மேலும் இதுதொடர்பாக வெளியான தகவலில், தானிஷ் சித்திக் ஆப்கானிஸ்தான் ராணுவ வாகனத்தில் சென்ற போது, தாலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளதால், தானிஷ் சித்திக் படுகாயமடைந்து, அருகே உள்ள மசூதி ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளார். பின்னர், மசூதியில் ஒரு பாத்திரிகையாளர் மறைந்திருப்பதைத் தெரிந்து கொண்ட தாலிபான்கள் அங்குச் சென்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், தானிஷ் சித்திக்கின் அடையாளங்களைப் பரிசோதனை பிறகே அவரை துன்புறுத்தி சுட்டுக் கொலை செய்துள்ளனர் என்றும் அவரை காப்பாற்ற முயன்ற ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களையும் தாலிபான்களால் கொடூரமாகக் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்