காவேரிப்பாக்கம் பேரூராட்சி செல்வநாயகம் கோவில் தெருவில் வசித்து வரும

 


 மனோகரன் என்பவரின் மகன் கருணாநிதி வயது 33 என்பவர் இவருக்கும் சுதா என்ற பெண்ணிற்கும்   திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கின்றான்

 இவர் காவேரிப்பாக்கத்தில் கேபிள் டிவி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக இவருக்கும் இவருடைய மனைவி சுதாவுக்கும் தகராறு ஏற்பட்டு சுதா தன் கணவர் கருணாநிதியிடம் கோபித்துக்கொண்டு அவர் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

 இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த இவர் கடந்த 06.07.21 செவ்வாய்க்கிழமை அன்று மாலை சுமார் 3.30 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி  தன்னைத் தானே எரித்துக் கொண்டார் 

சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர் உறவினர்கள் கருணாநிதியை மீட்டு சென்னையிலுள்ள கேஎம்சிஅரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கே அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு