இருளில் நடந்து செல்லும் மக்கள் வெளிச்சத்தை காண்பார்களா? குருடான உயர் கோபுர மின் விளக்குகள்

 


பொதுமக்களின் வசதிக்காக நெமிலி வட்டத்திற்கு உட்பட்ட இரவு நேரங்களில் மின் விளக்கு வெளிச்சம்  குறைவான திருமாதலம்பாக்கம், சேந்தமங்கலம், சயனபுரம், நெல்லிகுப்பம், காட்டுப்பாக்கம், கடம்பனல்லூர், நாகவேடு, பல்லூர், சித்தேரி போன்ற  பல்வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்து உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டது

 ஆனால் கோபுர மின்விளக்குகள் பழுதடைந்து குருட்டு கோபுரங்களாகவும், சில இடங்களில் கோபுர மின்விளக்குகள் உடைந்து

 


பாதியில் தொங்கிக் கொண்டும், உடைந்து கீழே விழுந்தும்  பாழடைந்து கிடக்கின்றது இதனால் பெரும்பான்மையான பகுதிகளில் பொதுமக்கள் இரவு நேரங்களில் இருளில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது

 சில பகுதிகளில் பொதுமக்கள் என்ன நடக்குமோ? என்று  பயத்தோடும், நடுக்கத்தோடும்,பாதையில்  நடந்து செல்ல வேண்டியிருக்கிறது ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த மின் விளக்கு கோபுரங்களை பராமரிக்க வேண்டிய துறை சார்ந்த அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்

 


இந்த சம்பவங்களை குறித்து சமூக  ஆர்வலர்கள் கருத்து தெரிவித்த போது இருளில் நடந்து செல்லும் மக்கள் வெளிச்சத்தை காண்பார்களா? என்ற கேள்வியோடு  பழுதடைந்த ஒவ்வொரு கோபுர மின் விளக்கு பகுதிகளையும் ஆய்வு செய்து இதனை  கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த மேலதிகாரிகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு