பா.ஜ.க எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தலைமையில் ரேஷன் கடை முற்றுகை !!


 கன்னியாகுமரி : மோசமான அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்களுடன் சேர்ந்து நாகர்கோவில் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி ரேஷன் கடையை முற்றுகையிட்டார்.

நாகர்கோவில் தம்மத்துக்கோணம் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் நாகர்கோவில் எம்.எல்.ஏ. .காந்தி மனு அளித்தார்.

இந்நிலையில் இன்று அந்த ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசி மிகவும் மோசமாக இருப்பதாக கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை அறிந்த நாகர்கோவில் எம்எல்ஏ காந்தி மற்றும் பா.ஜனதாவினர் ரேஷன் கடைக்கு சென்று முற்றுகையிட்டனர்.

இதனை அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோணம் அரசு குடோனில் இருந்து லாரி மூலம் நல்ல அரிசி மூடைகள் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. எம்எல்ஏ நடத்திய திடீர் போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை