மாவட்ட ஆட்சியர் தலைமையில் புகையிலை, பான்மசாலா, குட்கா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு உறுதி மொழி மற்றும் கொரோனா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாஸ்டன் புஷ்பராஜ் , இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள்மற்றும் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் நிர்வாகிகள், முஹம்மத் அயூப், நிஷாத் அஹ்மத், முஹமத் பஹிம்,முஹம்மத் தமிம்,முஹம்மத் ஹாஷிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.