போதை ஊசி பயன்படுத்தும் இளைஞர்கள்... சுகுணாபுரம் மலை குகைகளை பயன்படுத்தி வந்த கும்பல்...

 


கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறத்தில் உள்ள மலைப்பகுதியினை போதை ஊசி போடும் இடமாக இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மலைப்பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் பெத்தேல் லிவீசி என்ற தனியார் நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் பின்புறம் உள்ள மலைப் பகுதியினை இளைஞர்கள் போதை ஊசி போட பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மலையடிவாரம் மற்றும் மலையின் மீது உள்ள குகை போன்ற பகுதிகளை போதை ஊசி போடும் இளைஞர்கள் பயன்படுத்தி வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மலை பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை ஊசி போட பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆங்காங்கே குவிந்து  கிடக்கின்றன. இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் , குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதிகளில் நேரடியாக  போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். ஆங்காங்கே போடப்பட்டுள்ள சிரிஞ்ச் மற்றும் ஊசி மருந்து தயாரிக்க பயன்படுத்தபட்ட மாத்திரை கவர்கள் போன்றவற்றை போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த பகுதியில் அடிக்கடி இளைஞர்கள் வந்து செல்வதால் சந்தேகம் அடைந்து மலைமீது ஏறி பார்த்தாகவும் அப்போதுதான் போதை ஊசி பயன்படுத்தப்பட்டு இருப்பதும் தெரிவந்ததாகவும், மலையின் மீதுள்ள குகையினை போதை ஊசி போட பயன்படுத்தி வருவதாகவும், காலை இந்த இடத்தினை நேரில் பார்க்க பொது மக்கள் வந்த போது அங்கிருந்த இளைஞர்கள் தப்பி ஒடியதாகவும் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெரோஸ்  என்பவர் தெரிவித்தார்

மலைப்பகுதியின் மீது கஞ்சா விற்பனை நடப்பதாகவும், மலையடிவாரத்தில் நிறைய வாகனங்களை நிறுத்திவிட்டு மலை மீது ஏறிவிடுவதாகவும், ஏதாவது கேட்டால் ஓட்டுமேல் கல் வீசி அடிக்ககின்றனர் எனவும் தோலில் பேக் மாட்டிக்கொண்டு வரும் இளைஞர்கள் இரவு 10 மணிக்கு மேலும் இந்த பகுதியில் சுற்றி திரிவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

போதைக்கு அடிமையான இளைஞர்கள் தினமும் மலைப்பகுதியில் முகாமிட்டு இருப்பதாகவும், பள்ளியில் யாரும் இல்லாமல் இருப்பதால் அந்த வழியாக மலை ஏறி செல்வதாகவும், நகரின் பல்வேறு பகுதியில் இருந்தும் இந்த பகுதிக்கு இளைஞர்கள் வந்து செல்வதகவும் சுகுணாபுரம் மலையடிவாரம் மற்றும் மலைப்பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட போலீசார் இளைஞர்கள் மீண்டும் வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் போலீசார்  கேட்டுக்கொண்டுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்