இரண்டு ஐஜி-க்கள் உட்பட ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம்!

 


தமிழ்நாடு அரசு 12 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி யாக தினகரன், திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாக விஜயகுமார் ஐபிஎஸ், தஞ்சை எஸ்.பியாக ராவலி பிரியா கந்தப்புனேனி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு சென்னை துணை ஆணையராக ஷியாமளா தேவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி எஸ்.பியாக இருந்த விஜயகுமார் ஐ.பி.எஸ்., திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் தேவராணி ஐ.பி.எஸ்., சைபர் க்ரைம் பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார், விக்ரமன் ஐ.பி.எஸ்., சி.ஐ.டி., குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாகக் கடந்த மாதம் தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றும் ஐபிஎஸ் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டார். இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆயுதப்படை ஐஜியாக உள்ள டாக்டர் ஜெ.லோகநாதன் பெருநகர சென்னை காவல்துறை தலைமையகத்தின் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

பெருநகர சென்னை காவல்துறை தலைமையகத்தின் கூடுதல் ஆணையராக உள்ள எம்.டி.குருமூர்த்தி ஐபிஎஸ், காவல்துறை தலைமையகத்தின் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டார்.

திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு பிரிவின் துணை ஆணையர் எம்.ராஜேந்திரன், காவல் கண்காணிப்பாளர் தகுதியுடன் கூடிய தூத்துக்குடியில் உள்ள காவல்துறை ஆட்சேப்பு பயிற்சி பள்ளியின் முதல்வராக நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவின் கமாண்டண்ட் டி.பி.சுரேஷ்குமார், திருநெல்வேலி மாவட்ட சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். தூத்துக்குடியில் உள்ள காவலர் ஆட்சேர்ப்பு  மற்றும் பயிற்சி பள்ளியின் முதல்வர் எஸ்.செந்தில், தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவின் கமாண்டண்ட் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு