சட்டப்பேரவை தோல்விக்கு பிறகு முதன்முறையாக டெல்லிக்கு சென்றிருக்கின்றனர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமியும், இதில் சுவாரஸ்சியம் என்னவென்றால் இருவரும் சேர்ந்து டெல்லி செல்லவில்லை, தனித்தனியாகவே டெல்லி பறந்திருக்கின்றனர்.
நேற்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு தனது மருகன் காசி விஸ்வநாதன் சகிதமாக சென்றார் ஒபிஎஸ். ஒபிஎஸ் டெல்லி சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இரவு 9.30 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி, இவருடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இருந்த தளவாய் சுந்தரம் ஆகியோரும் இணைந்து சென்றனர். ஒபிஎஸ் தன்னந்தனியாக டெல்லி சென்ற நிலையில், எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகளுடன் தனியாக பிரிந்து டெல்லி சென்றுள்ளது அதிமுகவில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே, அதிமுக-வில் ஒபிஎஸ்-க்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை, எல்லா முடிவுகளையும் எடப்பாடி பழனிசாமியே எடுக்கிறார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஒபிஎஸ் டெல்லி சென்றவுடனேயே தனது சகாக்களுடன் எடப்பாடி பழனிசாமியும் விமானம் ஏறியது சர்ச்சைகளுக்கு கச்சைக்கட்டியுள்ளது.