துவங்கும் துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் படம்!

 


மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை துவங்கினார் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இப்படத்தில், துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது அவர் தந்தையுடன் இணைந்து விக்ரம் 60 படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்தப் படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

  • இதற்கடுத்து இயக்குநர் மாரி செல்வராஜின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் துருவ். இயக்குநர் பா ரஞ்சித் தயாரிக்கும் இந்தப் படம் கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படவிருக்கிறது. மாரி செல்வராஜின் முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ படத்தையும் ரஞ்சித் தயாரித்திருந்தார்

    இந்நிலையில் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் இணையும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டில் துவங்கவிருக்கிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)