அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்

 சென்னை பூந்தமல்லி டிஜிபி நகரை சார்ந்த ஜெயவேல் என்பவரின் மகன் சதீஷ் வயது 30 கடந்த 13. 7. 21 அன்று சென்னையிலிருந்து  திருவண்ணாமலையிலலுள்ள தன்னுடைய உறவினரின் சாவுக்கு சென்று மாருதி ஆட்டோ காரில்  திரும்பி வந்துகொண்டிருந்தபோது காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி கிராமம்  தேசிய நெடுஞ்சாலை நெருங்கும்போது சாலையின் சென்டர் மீடியாவில் மோதி கார் தலைகீழாக கவிழ்ந்தது

சுமைதாங்கி கிராமத்தைச் சார்ந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டனர் பின்னர் அவர் எழுந்து சென்னை  பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிர்ப்புற சாலையில்   நடந்து சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  வாலாஜா அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டு சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது

 மேலும் காவேரிப்பாக்கம் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.