தேசிய நெடுஞ்சாலையில் காவேரிபாக்கம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள அதி வெளிச்ச மின்விளக்கு கோபுரம் உள்ளது

 


காவேரிப்பாக்கம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட  சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிபாக்கம் காவல் நிலையம் அருகே  அமைந்துள்ள அதி வெளிச்ச மின்விளக்கு கோபுரம் உள்ளது

 இந்த மின் விளக்கிலிருந்து வரும் வெளிச்சம் மிகவும் குறைவாக உள்ளது இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள்  இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும், சாலையைக் கடக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த முக்கிய சந்திப்பின் அருகில் பேருந்து நிலையம் உள்ளது

 பல்வேறு  தொழிற்சாலைகளிலிருந்து தங்களது வேலையை முடித்து நள்ளிரவில் வருபவர்கள் நபர்கள் ஏராளம் மேலும் நள்ளிரவு நேரங்களில் கனரக வாகனங்கள் ,கார்கள் மற்றும் இதர வாகனங்கள் அதிவேகத்தில் செல்லுவதாலும் இந்த மின் விளக்கு வெளிச்சம் குறைபாடால் சாலையை கடக்க மிகவும் சிரமப்பட்டு பல விபத்துக்குள்ளாகி வருகின்றர்

 இதனைக் கண்டு பொதுமக்கள் வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை இத்துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும்  எந்த ஒரு நடவடிக்கையும்  இதுவரை எடுக்கவில்லை

 இதே நிலை தொடர்ந்து நீடித்தால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர் மேலும் இந்த  மின் விளக்கு கம்பத்தில் உள்ள பல்புகள் அது வெளிச்சம் பல்புகளாக இல்லை டம்மியான பல்புகள்  சாதாரண மின் விளக்கு என்று  குற்றச்சாட்டி வருகின்றனர்.

 மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் அதி வெளிச்சம் மின் பல்புகளை பொருத்தினால் மின்சார கட்டணம் அதிகமாக வருகிறது யார்? பில் கட்டுவது என்றும் அதெல்லாம் செய்து தர முடியாது உங்களானதை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பேசி வருகிறார் என்றனர் 

மேலும் தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையான அத்திப்பட்டு சாலையில் அதி வெளிச்ச  மின் விளக்கு அமைத்து தர அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர் .

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)