கும்பகோணம் பள்ளி தீவிபத்து தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் : குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் கோரிக்கை


கும்பகோணத்தில் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கடந்த 16ஆண்டுக்கு முன்பு தீ விபத்து நிகழ்ந்தது .

கும்பகோணம் : கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 17ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு முன்பு பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்து இன்றளவும் அதன் பாதிப்பிலிருந்து மீளாமல் உள்ளனர்.


இதில் 94 குழந்தைகள் கருகி உயிரிழந்தனர்.18 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது .உலகையே உலுக்கிய இச் சம்பவத்தின் 17ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் சம்பவம் நடந்த பள்ளி முன்பு தங்களது குழந்தைகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

 17 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது குழந்தைகள் என்னென்ன உணவுப் பண்டங்களை விரும்பி உண்டார்களோ அந்த உணவுப் பொருட்களை அவர்களது உருவ படத்திற்கு முன்பு வைத்து ,மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .இறந்த குழந்தைகளின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து வருகின்றனர் .சில பெற்றோர்கள் வாய்விட்டு கதறி அழுகின்றனர். தொடர்ந்து நினைவஞ்சலி அரசு தலைமை கொறடா ஊர்வலமாக வந்து நினைவு பூங்காவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் நகர செயலாளர் தமிழழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.அதனைத் தொடர்ந்து கும்பகோணம் பழைய பாலக்கரையில் தமிழக அரசு சார்பில் இறந்த 94 குழந்தைகளின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபி மற்றும் குழந்தைகளின் கல்லறைகளில் மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.-செய்தியாளர்,விக்னேஷ்,கும்பகோணம்

 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)