மாணவர்கள் தயாராகுங்கள்நீட் தேர்வுக்கு… நாளைய தீர்ப்பை பொறுத்தே அரசின் முடிவு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

 


நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத தேர்வு செப்., 12ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது :- நீட் தேர்வு விவகாரத்தில் அரசு கைவிட்டு விட்டதாக மாணவர்கள் நினைக்கக் கூடாது. நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.

மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, நீட் தேர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை தமிழக அரசு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும், என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா