""ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் செயலாளராக வாலாஜா தொழில்அதிபர் மற்றும் பிரபல சமுக சேவகர் ஜே.சஜன்ராஜ் ஜெயின் தேர்வு

 


ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் செயலாளர்  அக்பர் ஷரிப்  இயற்கை எய்தியதை அடுத்து புதிய செயலாளரை தேர்வு செய்ய நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தலைவர் ஜேஎல்.ஈஸ்வரப்பன் எம்எல்ஏ, வாலாஜா ஜெயின் தங்கமாளிகை உரிமையாளர் மற்றும் சமுக சேவகர் ஜே. சர்ஜன்ராஜ் ஜெயினை முன்மொழிய

 முதியோர் இல்லத்தின் பொருளாளர் பி.என்.பக்தவச்சலம்  வழிமொழிய  கலந்துகொண்ட அனைத்து  செயற்குழு உறுப்பினர்கள் ஏக மனதாக ஏற்றுக் கொண்டதின் பேரில் ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்லத்தின் செயலாளராக  வாலாஜா  சஜன்ராஜ்  ஜெயின்  தேர்வு செய்யப்பட்டார்

 ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வியாபார சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வளர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், என பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்