வாடகை பிரச்னையெல்லாம் இனி காவல்துறை விசாரிக்காது - அறிவிப்பு பலகையே வச்சாச்சு!

 


வீட்டு வாடகை பிரச்சனை தொடர்பாக இனி விசாரிக்கபடாது, ஆர்.டி.ஓ-விடம் தான் முறையிட வேண்டும் என காவல்நிலையங்களில் அறிவிப்பு பலகை வைத்த மதுரை மாநகர காவல்துறை.

நிலம், வீடு, வாடகை தொடர்பான சிவில் பிரச்னையில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மக்கள் காவல்துறையினர் விசாரிப்பதில் மட்டுமே தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர். இரு தரப்பிலும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்துவதை  கட்டப்பஞ்சாயத்து எனக்கூறி அதிகாரிகளுக்கும் , நீதிமன்றத்திற்கும் அதிக புகார்கள் செல்கிறது.

சிவில் தொடர்பான பிரச்சனைகள் பேசி பார்த்தும் முடியாத புகார்களை, நீதி மன்றத்தில் தீர்த்து கொள்ளும்படி கூறி காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர் 

தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் உரிமை, வாடகையாளர் , வாடகைதாரர் இடையேயான பிரச்னையை தீர்க்க ஆர்.டி.ஓ. , அந்தஸ்தில் நிர்ணய அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில்இனி வீட்டு வாடகை பிரச்னை குறித்து காவல் நிலையத்தில் விசாரிக்கப் போவதில்லை என மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையிலும் காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஆர்.டி.ஓ- விடம் நேரிலோ அல்லது www.tenancy.tn.gov.in இணைய தளத்திலோ தெரிவிக்கலாம்  என காவல்துறை வைத்துள்ள அறிவிப்பு பலகையில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில்,
மக்கள் சரியான விழிப்புணர்வு இல்லாமல் இப்படி காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுக்கின்றனர். ஆனால் இதை முறைப்படி ஆர்டிஓ விட மட்டுமே சரி செய்ய முடியும். இதனால் காவல் துறையினரின் வேலைப்பழு கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது எனக் கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!