ரிசல்ட் வெப்சைட் வேலை செய்யவில்லையா? உங்க செல்போனுக்கே மதிப்பெண்கள் வந்துவிடும்

 


தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்களுக்கான பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16ஆயிரத்து 473 உள்ளது.  ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளியிட்டார். கொரோனா காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

இதற்காக 4 இணையதளங்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
dge.tn.gov.in,
dge2.tn.nic.in-இல் அறியலாம்

மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.ஜூலை 22-ம் தேதி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம்.

அரசு அறிவித்துள்ள இணையத்தளங்களில் தேர்வு முடிவுகள் காண்பதில் சிக்கல் இருப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள்  அனுப்பப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்