கேரள மாநிலத்தில் சப் கலெக்டர் ஆன குமரி இளம் பெண்!!

 


நடுத்தர குடும்ப வழக்கறிஞருரின் மூன்றாவது மகளாக பிறந்து ஐஏஎஸ் படித்து சாதித்த மாணவி, கேரளா மாநிலம்  கோழிக்கோடு மாவட்ட சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளமு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாட்டூர் அடுத்த சோட்டபணிக்கன் தேரிவிளை பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 65). வக்கீலாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தமயந்தி (வயது 60).

இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருந்தனர். இவர் இவரது குழந்தைகளை அரசு பணியில் சேர்க்க வேண்டும் என்பதில் அதிக கவனத்துடன் செயல்பட்டார். இதனால் வரதராஜன் தனது வாழ்க்கையை தியாகம் செய்து குழந்தைகளின் படிப்பிற்காக செலவு செய்து வந்தார்.

இந்நிலையில் அவரது மூன்றாவது மகள் செல்சாசினி ஐஏஎஸ் படிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். தனது மகளின் நலனுக்காக சொந்த ஊரில் இருந்து நாகர்கோவிலுக்கு வாடகை வீட்டில் குடிபெயர்ந்த வரதராஜன் மகள் படிப்பிற்கு அதிக அக்கறையுடன் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் செல்சாசினி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து மிசோரியில் நடந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சியில்  இவர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் இவர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்ட சப் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அறிந்த அவரது தந்தை உள்பட உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏழ்மை காலத்திலும் ஐஏஎஸ் பயிற்சியில் தேர்வு பெற்று ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வெற்றி பெற்ற அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)