வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வாலாஜாவில் மறைந்த முன்னாள் சங்க நிர்வாகிகளின் படத்தை திறந்து வைத்தார்

 
வாலாஜா அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மறைந்த சங்க நிர்வாகிகளின் படத்திறப்பு விழா வாலாஜா சங்க கட்டிடத்தில் நடைபெற்றது

வாலாஜா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வி.வேலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்

 செயலாளர் .காஜா ஷெரிப் அனைவரையும் வரவேற்றார் 

எளிமையில் பிறந்து ஓடி ஓடி உழைத்து வாரி வாரி வழங்கும் மாரியாய் வணிகர் நலனுக்கும் நகர மக்களுக்கும் நலம் பெற இறுதி மூச்சு உள்ளவரை உழைத்து மறைந்தாலும் வாலாஜா மக்களின் மனதில் மறையாமல் நினைவிலிருக்கும் வாலாஜா அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் தெய்வத்திரு புண்ணியகோடி முன்னாள் செயலாளர், தெய்வத்திரு அக்பர் ஷரிப், ஆகியோர்களின் புகழ் மற்றும் சேவை வாலாஜா மக்களின் மனதில் என்றும் நினைவில் இருக்கும் என கூறி திருவுருவ படங்களை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செய்தார் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா, உடன் மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, 

வேலூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பொன்.கு. சரவணன் ,மற்றும் வாலாஜா அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் செந்தில் பாண்டி ,சங்க துணை தலைவர் முத்துசாமி நாடார் ,துணை செயலாளர் தங்கராஜ், துணை செயலாளர் ஹரிதாஸ் ,வாலாஜா வியாபாரிகள் நல அறக்கட்டளை அறங்காவலர்கள் ராஜா, அஹ்மத் ஷரிப், அன்பழகன், கரிமுல்லா, மற்றும் வாலாஜா அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர் சர்ஜன்ராஜ் ஜெயின் நன்றியுரையாற்றினர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)