அதிமுக ஒன்றிய தலைவர்… வேட்டியை அவிழ்த்த திமுக நிர்வாகிகள்… கூட்டத்தை விட்டு ஓட்டம் எடுத்த சம்பவம்…!!


 கரூர் : பதவிக்காக அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவிய ஒன்றிய தலைவரை திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஓட ஓட விரட்டியடித்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடவூர் ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் கடவூர் செல்வராஜ். இவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அதிமுகவில் கடவூர் ஒன்றிய செயலாளராகவும், பதவி வகித்து வந்தார். தற்போது திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து, பதவிக்காக ஒரு சிலர் கரூர் மாவட்ட அளவில் கட்சி பொறுப்பிலிருந்தும், கூட்டுறவு பொறுப்பிலிருந்தும், உள்ளாட்சி பிரதிநிதி பொறுப்பிலிருந்தும் விலகி சென்றுள்ளனர்.

இந்நிலையில், திமுக அறிமுக கூட்டம் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட சேர்வைக்காரன்பட்டி, கடவூர் ஆகிய பகுதியில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுகவில் இருந்து விலகிய கடவூர் செல்வராஜ் திமுகவில் இணைந்த பின்பு முதன்முதலாக கலந்து கொண்டார்.

அப்போது, கடவூர் செல்வராஜின் வருகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக ஒன்றிய செயலாளர் சுதாகர் அனுமதி இல்லாமல் எப்படி நீ மட்டும் தனியாக வரலாம், நாங்கள் ஒன்றுபட்ட திமுகவில் குழப்பத்தினை ஏற்படுத்த நினைக்கின்றாயா?, கட்சியில் நீ இணைந்தால் முதலில் கட்சியில் சேர்ந்த உடனே கழகத்தினை ஏற்படுத்த நினைக்கின்றாயா? ஒன்றிய செயலாளர் இல்லாமல் எப்படி கிளை செயலாளர்களை சந்திக்கின்றாய் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். திமுகவினர் ஒரு புறமும் அவரை பிச்சு உதற, மற்றொரு புறம் பொதுமக்களும், அதிமுகவினரும் போர்க்கொடி தூக்கினர்.

அதிமுகவில் நின்று ஜெயித்து விட்டு, இப்படி பதவிக்காக திமுகவை தேடிச் செல்வது எந்த விதத்தில் நியாயம் என்றும், வாக்குகள் வாங்கும் போது மட்டும் அதிமுக சின்னம், அம்மாவின் கோட்டை என்று கூறி வாக்குகள் வாங்கி பின்பு எப்படி எந்த முகத்தினை வைத்து கொண்டு திமுக நிகழ்ச்சிக்கு சென்றீர்கள் என மாறி மாறி கேள்வி எழுப்பினர். இதனால், முகத்திரை கிழிந்த கடவூர் செல்வராஜ், தற்போது அதிமுகவுக்கு திரும்ப முடியாமலும், திமுகவுக்கு செல்ல முடியாமுல் நிர்கதியாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை போல, பதவிக்காக ஆசைப்பட்டு கட்சி விட்டு கட்சி தாவ நினைக்கும் அரசியல் தலைவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம் என்று அரசியல் கட்சியினர் கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)