பருவமழை தொடங்கவே இல்ல... அதுக்குள்ள மிதக்குது காஞ்சிபுரம்!

 


காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் அதிகளவு மழை பெய்து வருகிறது . இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க துவங்கியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்துள்ள தாமல் சின்ன காலனி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் நகர் குடியிருப்பில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை 8 வழி சாலை ஆக மாற்றப்படுவதால், சாலை விரிவாக்கப் பணிக்காக அப்பகுதில் இருந்த மழைநீர் கால்வாய் அகற்றப்பட்டு சாலை போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது


இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக அம்பேத்கார் நகர் பகுதியில் உள்ள தெருக்கள் முழுவதும் வெள்ள காடாகவும், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. அப்பகுதியில் மண்சுவர் மூலம் கட்டப்பட்ட வீடுகள் இருப்பதால் மண்சுவர் நீர் ஊறி விழும் அபாயமும் உள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.எனவே அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் மழை நீர் செல்லும் வடிகால் கால்வாயை புதிதாக அமைத்து  நீர்வடிய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இன்னும் சில வாரங்களில் தமிழகத்தில் பருவமழை துவங்க இருப்பதால் உடனடியாக மழைநீர்  கால்வாய் அமைக்க வேண்டும், அவ்வாறு செய்யும் பட்சத்தில் பருவ காலங்களில் பெரும் சேதத்தை தவிர்க்கலாம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கொரோனா நோய்தொற்று காலங்களில் வாழ்வாதாரம் இழந்து விவசாயம் மட்டுமே  நம்பியிருக்கும் இப்பகுதி மக்கள் ஆடு,மாடு கோழி போன்றவைகளை வளர்த்து வரும் நிலையில்,  இரண்டு நாட்களாக பெய்த மழையில் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாகவும், அவற்றுக்கும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதாக பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


இதுமட்டுமல்லாமல் மழைநீர் வெள்ளத்தால் கழிவுநீர் உள்ளிட்டவை வீட்டிற்குள் நுழைவதால் தெருக்களிலும் துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தால் வீட்டிற்குள் தூங்க முடியாமல் இரவு முழுக்க விழித்திருக்கும் நிலை ஏற்பட்டதுள்ளது அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்தின் மூலம் இக்கிராமத்தின் மழைநீர் வடிகால் கால்வாய் அகற்றப்பட்ட காரணத்திற்காகத்தான்  இக்கிராமத்தில் இந்த நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் நேற்று பெய்த மழை அளவு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.7 சென்டி மீட்டர் மழை பெய்துள்து. காஞ்சிபுரத்தில் 57 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 40 மில்லி மீட்டர் ,உத்தரமேரூரில் ஒரு மில்லி மீட்டர் , வாலாஜாபாத்தில் 7 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கத்தில் 34 மில்லி மீட்டர் ,குன்றத்தூரில் 38 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்