ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை அதிமுக துணை கொறடா சு. ரவி எம் எல் ஏ துவக்கி வைத்தார்

 


அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை அதிமுக துணை கொறடா சு. ரவி எம் எல் ஏ துவக்கி வைத்தார்

அரக்கோணம் அடுத்த குருவராஜப்பேட்டை பகுதியில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை நேற்று அதிமுக துணை கொறடாவும் ராணிபேட்டை மாவட்ட செயலாளருமான சு. ரவி எம் எல் ஏ துவக்கி வைத்தார். மருத்துவ வல்லுநர்கள் கொரோனா மூன்றாம் அலை குறித்து எச்சரித்து வரும் நிலையில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மூன்றாம் அலையினை தடுக்கும் வகையில் நேற்று அனைத்து கிராம பகுதிகளிலும் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை  அதிமுக துணை கொறடா சு.ரவி துவக்கி வைத்தார். அப்போது அரக்கோணம் பி டி ஓ ஜோசப் கென்னடி, அரக்கோணம் ஒன்றிய செயலாளர்கள் பழனி, பிரகாஷ், நெமிலி ஒன்றிய செயலாளர் ஏ ஜி விஜயன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு