மருதம்பள்ளம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனியார் தார் பிளான்ட் ஆலையால் புகை மற்றும் தூசிகளால் குடியிருப்புகள்,விவசாயம், வாகன ஓட்டிகள் பாதிப்பு.

 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மருதம்பள்ளம் ஊராட்சியில் கடந்ந சில தினங்களுக்கு முன்னர் குடியிருப்பு பகுதிக்கு அருகில் தனியார் தார் பிளான்ட் ஆலை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இதனால் ஆலையிலிருந்து வரும் கடுமையான  புகை மற்றும் தூசிகளால் அருகில் உள்ள ஏராளமான குடியிருப்பு பொதுமக்கள் மூச்சு திணறல் கண் எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்படுவதோடு, விவசாய நிலங்களில் படிவதால் விவாசாயம் பாதிப்பதாகவும் மேலும் சாலை ஓரத்திலேயே ஆலை உள்ளதால் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.-மயிலாடுதுறை செய்தியாளர் பாலமுருகன்