இலவச கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இலவச கொரோனா தடுப்பூசி முகாம் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மற்றும் ஆற்காடு கோட்டை ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இணைந்து ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 நாட்களாக 31.07.21 -01.08.21 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்று வருகின்றனஇம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்,பெண்கள்,வாலிபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஆற்காடு கோட்டை ரோட்டரி சங்கத் முன்னாள் தலைவர்கள் இறைமொழி, பூபாலன், செயலாளர் வீரபாண்டியன், சங்கப்பணி, மருத்துவ இயக்குனர் ஜெயசிங் விஜய்,
உறுப்பினர்கள் பாலாஜி, சம்பந்தம், பால்ராஜ் மற்றும். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் க.பூபாலன், துணை தலைவர் ஶ்ரீதர், துணை செயலாளர் மோகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.முகாமை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சுரேஷ் பாபு துவக்கி வைத்தார்.
இந்த முகாம் ராணிப்பேட்டை மாவட்ட அறிவியல் இயக்கம் ஒருங்கிணைக்கும் 46 வது தடுப்பூசி முகாம் என்பது குறிப்பிடதக்கது நேற்று நடைபெற்ற முகாமில் சுமார் 151 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் இதுவரையில் இந்த முகாமின் மூலம் மொத்தமாக 13747 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.