இராணிப்பேட்டை காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்களால் கொடியசைத்து துவங்கினர்

 



இராணிப்பேட்டை மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றங்கள் மற்றும் சாலை விபத்தினை குறைக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் "கருடா  வாகன ரோந்து" இன்று (14.07.2021) இராணிப்பேட்டை  காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. ஓம் பிரகாஷ் மீனா, இ.கா.ப., அவர்களால் கொடியசைத்து துவங்கி வைக்கப்படுகின்றது.


கருடா  வாகன ரோந்து இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய எல்லைகளுக்குள் 26 இருசக்கர வாகனங்கள் மூலம் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு 24 மணி நேரமும் காவலர்கள் சுழற்சி முறையில் ரோந்து செல்வர். பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் மற்றும் புகார்கள் என்றால் 9498180972 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் 5 நிமிடங்களுக்குள் சம்பவ இடம் செல்வதற்கு கருடா வாகன ரோந்து ஏதுவாக இருக்கும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தனர்

 


இந்நிகழ்ச்சியில்  K.T. பூரணி, துணை காவல் கண்காணிப்பாளர், இராணிப்பேட்டை உட்கோட்டம், இராணிப்பேட்டை வட்ட காவல் ஆய்வாளர் சாலமன்ராஜ், இராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் முகேஷ்குமார், உதவி ஆய்வாளர்கள்  மற்றும் காவலர்கள் சமூக இடைவெளியுடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழாவில் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!