எந்த எந்த மையங்களில் எவ்வளவு தடுப்பூசி செலுத்தப்படுகின்றன? கையிருப்பில் இருக்கும் தடுப்பூசி எவ்வளவு?

 


சென்னையில் கொரோனா தொற்றை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது.

சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இவரை 25,61,565 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை தடுப்பூசி முகாம் நடைப்பெறாது எனவும், தடுப்பூசி வந்த பின் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையத்தில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு தமிழ்நாட்டிற்கு 6லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்த நிலையில் மத்திய கிடங்கில் இருந்து 1லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக கேட்டு பெற்றப்பட்டது. மேலும் 36000 கோவேக்சின் தடுப்பூசிகளோடு தற்போது தமிழ்நாட்டில் 7லட்சத்து 36000 தடுப்பூசி கையிருப்பில் உள்ளன.

பெறப்பட்ட தடுப்பூசிகள் மாவட்ட தடுப்பூசி மையங்களுக்கு பிரித்து அனுப்பபட்டன. அதில் சென்னைக்கு மட்டும் 48000தடுப்பூசி ஒதுக்கப்பட்டது.  சென்னையில் உள்ள 45 தடுப்பூசி மையங்களில் ஒரு மையத்திற்கு 400 தடுப்பூசிகளும் 18 சுகாதார மையங்களுக்கு 200 தடுப்பூசிகளும்  அனுப்பபட்டுள்ளன. தடுப்பூசி கிடைக்கபெற்றதால் வழக்கம் போல் சென்னையில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பில் உள்ளதால் சென்னையில் ஆன்லைன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேரில் வருகவர்களுக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தறிக்கு 1.55கோடி தடுப்பூசி பெறப்பட்டுள்ள நிலையில் 1.48கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சென்னையை பொருத்தவரை இதுவரை 25,61,565 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)