வங்கதேச பெண்கள்..போலி ஆவணம்- கடலூரில் ரகசியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட கொல்கத்தா கும்பல்

 


கடலூர் அருகே போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த வங்க தேசத்தினரிடம் புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் அடுத்துள்ளது பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சி. இங்கு சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதனடிப்படையில், மத்திய புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மாதவன், ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தேவேந்திரன் ஆகியோர் குறிப்பிட்ட வீட்டை சுற்றி வளைத்தனர். அந்த வீட்டில் 3 ஆண்கள், 2 பெண்கள், 3 வயது குழந்தை இருந்தது. 

அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் வங்கதேசத்தினர் என்றும் ஆனால், தாங்கள் மேற்கு வங்கம் கொல்கத்தாவைச்  சேர்ந்தவர்கள் என்று அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, வீட்டில் நடத்திய சோதனையில் பல போலியான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டினருடன் அடிக்கடி தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது.இதனையடுத்து, அங்கிருந்தவர்களை வேறு இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.  

மேலும், அவர்கள் அங்கு தங்குவதற்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்த நபரையும் தேடி வருகின்றனர். அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய  விசாரணையில் கடந்த சில  மாதங்களாக இப்பகுதியில் தங்கியிருந்த போதிலும் அப்பகுதியில் யாரிடமும் பேசியதில்லையாம். வெளியிலும் வருவதில்லையாம். அதனால், அந்த தெருவில் உள்ள ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அங்கு ஒரு குடும்பம் இருப்பதே தெரியாது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. 

கடலூரில் வங்கதேசத்தினர் பிடிபட்டிருப்பது பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளதுகொல்கத்தா பகுதியை  சேர்நத நாஜ்மூர் ஷித்தர்,ஷக்தர் முல்லா,பாபுஷேக் என்ற 3 இளைஞர்கள்( பாலியல் தொழில்  ஏஜென்டுக்கள்) 2 பெண்களை வைத்து கொண்டு கடலூர் பெரியகங்கணாங்குப்பம்  பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைக்கப்பட்ட பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த பகுதியிலிருந்து நாள்தோறும் இவர்கள் வெளியே சென்றுவிட்டு சந்தேகமாக வந்து செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதனை தொடர்ந்து போலீசார்  ரகசியமாக நடத்தப்பட்ட விசாரணையில் கொல்கத்தா பகுதியைச் சேர்ந்த 2 பெண்களை வைத்து கொண்டு 3 ஏஜென்டுகளும் பாண்டி உள்ளிட்ட பல பகுதிகளிக்கு அந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுவது சம்பவம் கண்டறிந்தனர். விசாரணைக்கு பின்னர் 2 பெண்கள் மற்றும் 3 ஆண்களையும் கைது செய்தனர்.

 அப்போது ஒரு சிறுவன் வீட்டில் இருந்ததை கண்டு சிறுவனையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.கொல்கத்தா பகுதியை சேர்நதவர்கள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.