தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

 
அரக்கோணம், ஜூலை.15-காமராஜர் பிறந்தநாள் தினத்தை கல்வி தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ஹரிதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.இதில் அரக்கோணம் நகர மன்ற முன்னாள் துணை தலைவர் ரவிச்சந்திரன், சுபாஷ்,மோகன் காந்தி, அசோக் குமார் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்