ஆள் மாறாட்டம், போலி பத்திரம் குறித்து விசாரணை : அமைச்சர் மூர்த்தி தகவல்

 


கடந்த ஆட்சியின் போது பத்திரப்பதிவுத்துறையில் நடைபெற்ற ஆள் மாறாட்டம், போலி பத்திரம் குறித்து முதல்வர் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். ள

மதுரையில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் உடனுக்குடன் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் 4 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் அரசு நிர்ணயம் செய்த தொகைகை விட குறைத்து பத்திரப்பதிவு செய்தவர்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி தேனி மாவட்டத்தில் முத்திரைத்தாள் தனி தாசில்தார் செந்தில்குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய 20 இலட்சத்து 23 ஆயிரத்து 650 ரூபாயை தன்னுடைய கணக்கில் செலுத்தியதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் இரவோடு இரவாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதிமுக ஆட்சி காலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் நடைபெற்ற ஆள் மாறாட்டம், போலி பத்திரம் குறித்து முதல்வர் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் சொல்லாத திட்டங்களை கூட முதல்வர் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு 2 மாதத்தில் முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டு காலமாக அறிவித்த திட்டங்கள் செயல்ப்படுத்தவில்லை. குறிப்பாக மதுரையில் மோனோ ரயில் எங்கே ஓடுகிறது என தெரியவில்லை. மதுரையில் தமிழண்னை சிலை அமைக்கவில்லை. திமுக தேர்தல் அறிவிக்கையில் அறிவித்த திட்டங்களை முதல்வர் படிப்படியாக நிறைவேற்றுவார், என கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!