ஆபாச படங்கள் பார்ப்பவர்களை குறிவைத்து மோசடி: போலி போலீஸ் கைது!

 


சென்னையை சேர்ந்த சிலர் டெல்லி போலீஸ் என கூறி மோசடியில் ஈடுபடுவதாக டெல்லி சைபர் கிரைம் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் சென்னை விரைந்து வந்து சென்னை மாங்காட்டை சேர்ந்த ராம்குமார், கொளத்தூரை சேர்ந்த கேப்ரியேல் ஜோசப்,  திருச்சியைச் சேர்ந்த தினோசந்த் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆபாச படங்களை பார்க்கும் நபர்களின் ஐடியை  கண்டுபிடித்து அவர்களிடம் டெல்லி காவல்துறை போல் பேசி டெல்லி காவல்துறையின் லோகோவை பயன்படுத்தி, ‘ நீங்கள் செய்த குற்றத்திற்கு  3000 முதல் 4000 வரை அபராதம் கட்ட வேண்டும்’ என்றும் இல்லையென்றால்  காவல்துறையினர் வீடுகளுக்கு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும்  மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சுமார் 34 லட்சம் ரூபாய் வரை  அவர்கள் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்களை   திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்து வந்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வந்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி டெல்லி அழைத்து சென்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா