நீர்வளத்துறை அமைச்சர்துரைமுருகனிடன் உறுதியளித்த மத்திய ஜல்சக்தி துறைஅமைச்சர்

 


மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தை கலந்தாலோசிக்காமல் அனுமதி தரமாட்டோம் என ஜல்சக்தித்துறை அமைச்சர் உறுதியளித்ததாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மூன்றுநாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர்  கஜேந்திர சிங் செகாவத்தை துரைமுருகன்  இன்று சந்தித்து பேசினார்.

அப்போது, காவிரியில் தமிழ் நாட்டிற்கு மாதாந்திர வாரியாக நீரை பில்லிகுண்டுலுவில்  அளிப்பதற்கு கர்நாடக அரசை வலியுறுத்தவும்,  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் தமிழகத்திற்கு பாதகத்தை விளைவிக்கும் என்றும் தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்றும் தெரிவித்து இத்திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் கொடுக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு  அணை கட்டியுள்ளது பற்றி பேசியதோடு பெண்ணையாற்றின் குறுக்கே  கட்டுமானங்களை தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டது. இதுபோல்,  முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், ’எந்த விவகாரம் ஆனாலும் தமிழகத்தை கேட்காமல் அனுமதிக்க மாட்டோம். இருவரையும் கலந்துபேசி தான் முடிவு செய்வோம், எனவே மேகதாது குறித்து கவலைப்பட வேண்டாம் என கஜேந்திர சிங்  செகாவத் உறுதியளித்தார்’ என தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்த தலைவர் இருந்தால்தான் எங்களுடையே கோரிக்கைகளை அவ்வப்போது வைக்கமுடியும் என தெரிவித்ததாகவும்  அதற்கு விரைவில் நிரந்த தலைவர் நியமிக்கப்படுவார் என ஜல்சக்தித்துறை அமைச்சர் தெரிவித்ததாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.

முல்லை பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்துவது குறித்து கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!