’ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு’ - தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை..!


 தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பு வகித்து வருபவர் பன்வாரிலால் புரோகித். அவர் நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் மோடியையும், பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் நேரில் சந்தித்து பேசினார். பின்னர், தமிழ்நாடு திரும்பிய அவர் நேற்று திருவள்ளூர் அருகே உள்ள பெரியபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

பெரியபாளையம் அருகே தண்டலம் என்ற கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அந்த மருத்துவமனையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். பின்னர், அந்த விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று பேசினார்.

பின்னர், அவர் தனது உரையின் முடிவில் ஜெய்ஹிந்த், ஜெய் தமிழ்நாடு என்று கூறி தனது உரையை முடித்தார். கடந்த மாதம் நடைபெற்ற 16வது சட்டமன்றத்தில் முதல் பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த உரையின்போது ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை பயன்படுத்தப்படாதது பேசுபொருளானது. இந்த சூழலில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஜெய்ஹிந்த் என்றும், ஜெய் தமிழ்நாடு என்றும் பேசியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்களில் பா.ஜ.க.வினர் ஜெய்ஹிந்த் என்றும், பாரத் மாதா கீ ஜே என்று கூறி பதவியேற்றதும், தி.மு.க.  உறுப்பினர்கள் வாழ்க பெரியார் நாமம், வாழ்க தமிழ் என்று தமிழில் கூறி பதவியேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே கூறி அழைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)