காவேரிப்பாக்கம் தேசியநெடுஞ்சாலை சிக்னலை கடக்க முயன்றவரின்மீது லோடு ஆட்டோ மோதியதில் முழங்கால் உடைந்தது

 


ஆற்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 43 என்பவர் காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில்  மசூதிக்குச்  எதிரே உள்ள  சிக்னலை கடக்க முயற்சி செய்தபோது, காவேரிப்பாக்கம்

 


உப்புமேடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் மோகன் வயது 33 என்பவர் லோடு ஆட்டோவில் வாலாஜாவிலிருந்து  மூட்டைகளை ஏற்றிக்கொண்டு காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சிக்னலை நெருங்கும்போதுதேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற கார்த்திக் என்பவர் மீது வேகமாக மோதியது

 லோடு ஆட்டோ அவரின் காலின் மீது சாய்ந்து  இடது முழங்கால் துண்டாக உடைந்து தொங்கியது இதனைப் பார்த்த அங்குள்ள பொதுமக்களும்,காவேரிப்பாக்கம் போலீசாரும்  ஓடி வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இந்த சம்பவத்தைக் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.