ராணிப்பேட்டை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

 ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை சம்பவம் சம்பந்தமாக பானவரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து  காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமிபதி  விசாரணை மேற்கொண்டு வந்தார்

இந்தநிலையில் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, பட்டாபிராமாபுரம் கிராமம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த சஞ்சீவிராயன் என்பவரின் மகன் பார்த்திபன் (வயது 32) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுக்கா ரங்காபுரம் கிராமம் பாட்டை தெருவைச் சேர்ந்த சின்னப்ப ரெட்டி என்பவரின் மகன் குமார் (வயது 49) ஆகியோர்களின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் 

 வகையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா  பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாஸ்டன்  புஷ்பராஜ்  ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டதின்  பேரில் பார்த்திபன் மற்றும் குமார் ஆகிய இருவரையும் ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்ததனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்